Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அச்சச்சோ... ஆன்லைனில் விற்பனைக்கு வந்த 2000ரூ நோட்டுக் கட்டு!

”சரவணா ஸ்டோர்ஸ்ல எல்லாமே விலை கம்மியா கிடைக்கும்.

அப்படியா? 500ரூ நோட்டு 450ரூபாய்க்கு கிடைக்குமா?”

சரவணா ஸ்டோர்ஸ் பிரபலமாக தொடங்கியபோது வாய்மொழியாகவே வைரல் ஆன ஜோக் இது. காலச்சக்கரம் சுற்றியதில் இந்த டிரெண்ட் ஆன்லைனுக்கு மாறிவிட்டது

2000

ஐஐடி மாணவர் ஒருவர் தன்னையே ஒரு நுகர்வு பொருளாக நினைத்து, தனக்கு ஒரு விலை நிர்ணயித்து ஒரு ஷாப்பிங் போர்ட்டலில் விற்பனைக்கு வந்தார். olx நிறுவனம் வந்த புதிதில் “என் பொண்டாட்டியை யாராவது வாங்குக்கிறீங்களா” என நக்கல் போஸ்ட் போட்ட கதையும் உண்டு. இந்த டிரெண்டில் சமீபத்தில் சேர்ந்த புது விஷயம் 2000 ரூபாய் நோட்டு

ஆம், ஏ.டி.எம்களில் பெரிய க்யூ. வங்கிக்கு சென்றாலும் 4500 ரூபாய்தான் என ஏகப்பட்ட கெடுபிடிக்கு நடுவே நேற்று ஒரு இணைய தளத்தில் 2000 நோட்டு கட்டு விற்பனைக்கு வந்தது. ஆன்லைன் மூலமாக பேமெண்ட் கட்டிவிட்டால், 2000 ரூபாய் கட்டு வீடு தேடி வரும் என்றது அந்த அறிவிப்பு. சிறிது நேரத்திலே உஷாரான தளத்தின் அட்மின்கள், அதை நீக்கிவிட்டார்கள். எந்த நுகர்வோரும் 2000 ரூபாய் கட்டை வாங்கவில்லை என்றும் சொன்னார்கள். பழைய நாணயங்களைச் சேர்க்கும் பழக்கமிருப்பவர்கள் அதை ஆன்லைனில் விற்பதுண்டு. ஆனால், புழக்கத்தில் இருக்கும் நோட்டை ஒருவர் அதிக விலைக்கு விற்க நினைத்தது இதுவே முதல் முறை.

வேறு என்ன என்ன வித்தியாசமான விஷயங்களை விற்கிறார்கள் என தேடிய போது நம் கண்ணில் பட்டது முத்திரைத்தாள்கள். குறிப்பிட்ட முகவர்களிடம், சான்றுகளை காட்டி மட்டுமே வாங்க முடிகிற முத்திரைத்தாள்களை ஆன்லைனில் விற்கலாமா என்ற சந்தேகம் எழுந்தது. இது குறித்து பதிவுத்துறையை சேர்ந்தவர்களிடம் விசாரித்தோம். ஸ்டாம்ப் பேப்பரை ஆன்லைனில் விற்கலாம். ஆனால், யாரிடம் இருந்து யார் வாங்குகிறார்கள் என்ற தகவல்கள் முக்கியம் என்றார்கள்.

- கார்க்கிபவா

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close