Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மீண்டும் சமாஜ்வாடியில் ராம் கோபால் யாதவ்

சமாஜ்வாடி கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. ராம் கோபால் யாதவ், மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளதாக சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.  

கடந்த அக்டோபர் மாதம் உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவுக்கும் அவரின் தந்தை முலாயம் சிங் யாதவுக்கும் பிரச்னை ஏற்பட்டபோது, அகிலேஷுக்கு ஆதரவாக  இருந்து வந்த ராம் கோபால், சமாஜ்வாடி கட்சியில் இருந்து  ஆறு வருடங்களுக்கு அதிரடியாக நீக்கப்பட்டார். இந்நிலையில் ராம் கோபால் நீக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து, சமாஜ்வாடி கட்சியின் மாநிலங்களவைத் தலைவராகவும் , கட்சியின் தேசிய நாடாளுமன்ற குழு உறுப்பினராகவும் ராம் கோபால் நீட்டிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ