Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

‘திருமண வீட்டார் 2.5 லட்சம் வரை எடுத்துக் கொள்ளலாம்’...பொதுமக்கள் நிம்மதி

இன்று செய்தியாளர்களை சந்தித்த அருண்ஜெட்லி, “ பழைய 500, 1000 ரூ நோட்டுகளை மாற்றுவது 4,500 ரூபாயில்  இருந்து 2,000 ரூபாய் வரை குறைக்கப்பட்டதால் மக்கள் பணத்தை தவறாக பயன்படுத்துவது  தவிர்க்கப்படும். திருமண வீட்டார்கள் ரூ 2.5 லட்சம் வரை எடுத்து கொள்ளலாம் என்ற அறிவிப்பு பொதுமக்களுக்கு நிம்மதியளித்துள்ளது” என தெரிவித்துள்ளார். 

மேலும், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்க 22,500 ஏடிஎம் இயந்திரங்கள் இன்று மாற்றி அமைக்கப்படும் என்றும் தற்போதைக்கு புதிய 1000 ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்பட மாட்டாது என்றும் அருண்ஜெட்லி  தெரிவித்துள்ளார். 

இன்று காலை பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில், திருமண வீட்டார்கள் ஒரு கணக்கில் மட்டும் ரூ 2.5 லட்சம் எடுத்து கொள்ளலாம். திருமணத்துக்கு பணம் அளிக்க உரிய ஆவணங்கள் அளிக்க வேண்டும். வங்கிக்கணக்கு வைத்திருக்கும் விவசாயிகள் வாரத்துக்கு ரூபாய் 25,000 வரை எடுக்கலாம் என அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close