Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இரவு பகலாக உழைத்த மேலாளர் வங்கியிலே மரணம்!

வங்கி

பிரதமர் மோடியின் அறிவிப்பை அடுத்து புதிய ஆயிரம், 500 ரூபாய் நோட்டுகளை வாங்க மக்கள் வங்கியில் குவிந்து வருகின்றனர். தொடர்ந்து 3 நாட்களாக  இரவு பகலாக பணியாற்றிய மேலாளர் ஒருவர்  தனது அறையிலேயே பரிதாபமாக இறந்து கிடந்துள்ளார்.  

கிர்கானைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் 57 வயது. இவர் ஹரியானா மாநிலம் ரோக்டக் நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களாக வங்கியில் பணம் எடுக்க ஏராளமான வாடிக்கையாளர்கள் முற்றுகையிட்டதால், ராஜேஷ் குமாரால் வீட்டுக்குக் கூட செல்ல முடியவில்லை. இரவு பகலாக வங்கியிலேயே இருந்து பணிகளை கவனித்து வந்தார். வேலைப்பளு காரணமாக அன்றாடம் எடுக்க வேண்டிய மருந்து, மாத்திரைகளும் உட்கொள்ளவில்லை. கடந்த 3 நாட்களாக வீட்டுக்கு செல்லாமல் தனது அறையிலேயே உறங்கியிருக்கிறார்

நேற்று காலையில் வங்கிக்கு வந்த பாதுகாவலர், மேலாளர் அறையைத் தட்டியுள்ளார். உள்ளேயிருந்து பதில் வரவில்லை. இதையடுத்து சக ஊழியர்களுக்கு தகவல் அளித்தார் பாதுகாவலர். ஊழியர்கள் வந்து கதவை உடைத்து பார்த்தபோது, உள்ளே ராஜேஷ்குமார் இறந்து போய் கிடந்துள்ளார். அசாம்பாவித சம்பவத்தையடுத்து வங்கியின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. இறந்து போன ராஜேஷ்குமாருக்கு மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோ அருகே மொகல்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சார்ஜு தேவி. 60 வயது நிரம்பிய இவரது கணவர் இறந்து விட்டார். இவரது மகன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர். மகனது சிகிச்சை செலவுக்காக தன்னிடம் இருந்த பழைய ஆயிரம் ரூபாய் 2 தாள்களை எடுத்துக் கொண்டு  வங்கிக்கு மாற்றச் சென்றார்  வங்கியில் 2 ஆயிரம் ரூபாய்க்கு மாற்றாக ஒரு ரூபாய் நாணயங்களை அடங்கிய பையை அளித்துள்ளனர். நாணயங்களுடன் வழங்கப்பட்ட பையின் எடை 17 கிலோ இருந்துள்ளது.  அதனை தூக்கிச் செல்ல முடியாமல், தனது மற்றொரு மகனை அழைத்து நாணயங்கள் அடங்கிய பையை வீட்டுக்கு எடுத்து சென்றுள்ளார். 

சார்ஜு தேவி, 'வங்கி கேஷியரிடம் நோட்டாக கொடுத்தால் உதவியாக இருக்கும்' என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அதற்கு 'வங்கியில் கொடுப்பதை வாங்கி விட்டு செல்லுங்கள் 'என பதில் கிடைத்திருக்கிறது. 

இந்த சமயத்தில் புதிய மோட்டார் சைக்கிள்களை புக் செய்தால், பழைய பணத்தை பெற்றுக் கொள்ள 6 ஆயிரம் ரூபாய் அதிகமாக கேட்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

- எம்.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ