Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணத்தை செல்லாது என அறிவித்து தோல்வி அடைந்த நாடுகள்!

 

 -

 

ந்திய மக்களிடம் 80 சதவீதம் புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள், பிரதமர் மோடி அறிவித்த நான்கு மணிநேரத்தில் செல்லாக் காசாகி விட்டன. மீதமுள்ள 20 சதவீதம், 100, 50, 20, 10 ரூபாய் நோட்டுகளை வைத்துதான், கடந்த 8 நாட்களாக மக்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். வங்கிகளில் போதிய அளவு பணம் கையிருப்பு இல்லாததால், நாட்டில் அவரசநிலை ஏற்பட்டுள்ளது போல மக்கள் உணர்கிறார்கள்.

இப்போது இந்தியப் பிரதமர் மோடி எடுத்துள்ள இந்த நடவடிக்கையை கடந்த 40 ஆண்டுகளில் பல நாட்டு அதிபர்களும், சர்வாதிகாரிகளும் எடுத்துள்ளனர். 'கறுப்புப் பணத்தை ஒழிக்கிறேன், ஊழலைத் தடுக்கிறேன்' என்று கூறி, மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை திடீரென  செல்லாது என கானா, நைஜீரியா, மியான்மர், சயீர், வடகொரியா நாடுகளின் சர்வாதிகாரிகளும், சோவியத் யூனியன் அதிபரும் அறிவித்தார்கள்.  இதன் மூலம் அந்தந்த நாடுகளில் கறுப்புப் பணம் ஒழிந்ததா? பணவீக்கம் குறைந்ததா? மக்கள் சுபிட்சம் அடைந்தார்களா? வரலாறு நமக்கு உணர்த்துவது என்ன?  இதற்கெல்லாம் பதில்கள் கீழே..
   

1982-ல், கானா நாட்டில்,  ஊழலை தடுப்பதற்கும், மக்களிடம் அதிகப்படியாக உள்ள பணப்புழக்கத்தை குறைக்கவும் அதிக மதிப்பு கொண்ட பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டது. ஏழை மக்களும், விவசாயிகளும் தங்களது பணத்தை மாற்ற பல கிலோ மீட்டர் நடக்க வேண்டியதாயிற்று.  இதனால் வங்கிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்து, வெளிநாட்டு பணங்களையும், சொத்துக்களையும் வாங்கினர். 

1984-ம் ஆண்டில், நைஜீரியாவை ஆண்டு வந்த முகம்மது புகாரி தலைமையிலான இராணுவ அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாக மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்தை ரத்துசெய்துவிட்டு, புதிய நிறம் கொண்ட புதிய ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தியது. இந்த நடவடிக்கையால் விலைவாசி அதிகரித்ததுடன், நாடும் கடன் சுமையில் சிக்கியது. 

1987-ம் ஆண்டில், மியான்மரை ஆட்சி செய்த இராணுவ ஆட்சிக் குழு, புழக்கத்திலிருந்த  80 சதவீத பணங்களை செல்லாது என அறிவித்தது. இதனால் நாட்டின் பொருளாதாரம் சீரழிந்ததால், பெருமளவு மக்கள் வீதியில் இறங்கிப் போராடினர். போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்களை ராணுவ ஆட்சியாளர்கள் கொன்றனர்.

1990-களில்  ஆப்பிரிக்க நாடான சயீர் (தற்போது காங்கோ மக்களாட்சிக் குடியரசு) நாட்டின் பொருளாதாரம் தேக்க நிலையில் இருந்தது. இதனால் நாட்டை ஆண்டு வந்த சர்வாதிகாரி மொபுடு சேசே, பணத் தாள் சீர்திருத்தங்களை மேற்கொண்டார். 1993-ல் மக்களிடம் புழக்கத்தில் இருந்த பணத்திற்கு தடை விதித்தார். இந்த சீர்திருத்தம் பொருட்களில் விலைவாசியை பல மடங்கு உயர்த்தியதுடன், அந்நாட்டு பணத்தின் டாலருக்கு மாற்று விகிதமும் அதலபாதாளத்திற்குச் சென்றது. அதன் பிறகு  உள்நாட்டுப் போர் ஏற்பட்டு, மொபுடு பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1991-ம் ஆண்டு சோவியத் யூனியனை ஆட்சி செய்து கொண்டிருந்த, கோர்பசேவ், கறுப்புப் பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக அதிக மதிப்புள்ள ரூபிள்களை செல்லாது என அறிவித்தார். இந்த சீர்திருத்தம் அதிகரிக்கும் பணவீக்கத்தை தடுத்து நிறுத்தத் தவறி விட்டது. விலைவாசி உயர்ந்தது. கோர்பசேவ் அரசு மீது மக்களுக்கு இருந்த நம்பிக்கை சிதைந்தது. சோவியத்தில் நிலவிய அரசியல் மோதல்கள் பொருளாதாரத்தை சரிவை நோக்கி இட்டுச் சென்றது. சில மாதங்களில் கோர்பசேவின் ஆட்சியை கவிழ்க்கும் முயற்சிகளும் நாட்டிற்குள் நடந்தன.

2010-ல் வடகொரியாவை ஆண்டு கொண்டிருந்த சர்வாதிகாரி கிம் ஜோங், நாட்டின் பொருளாதாரத்தின் கட்டுப்பாட்டை இறுக்கவும், கறுப்பு சந்தைகளை முடக்கவும் அதிக மதிப்புள்ள நாணயங்களை தடை செய்தார்.  இந்த  நடவடிக்கையால், விவசாயம் முடங்கி கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்ததால், நாட்டில் அசாதரண சூழ்நிலை உருவானது. மக்களின் கோபத்துக்கு உள்ளான சர்வாதிகாரி கிம் ஜோங், மக்களிடம் மன்னிப்பு கேட்டார்.

ஆக, இவற்றையெல்லாம் இந்திய அரசு உணருமா?

-ஆ.நந்தகுமார்

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ