Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

500, 1000 ரூ அறிவிப்பை திரும்ப பெறும் பேச்சுக்கே இடமில்லை : அருண் ஜெட்லி  

500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், “காங்கிரஸ், மக்களின் நலனுக்காக மோடி அரசின் முயற்சியை ஆதரிக்க வேண்டும். ஆனால் அவர்களோ கறுப்புப் பண ஒழிப்பு முயற்சிக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இந்திய பொருளாதாரம் வளர்ச்சியடைவே இந்த ஏற்பாடு. மக்கள் ஆதரிக்க வேண்டும், வங்கிகள் கடந்த 7 நாட்களாக கோடிக் கணக்கான பணத்தை கையாண்டு வருகின்றனர். அவர்களின் ஒத்துழைப்புக்கு நன்றி”, எனத் தெரிவித்துள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்