Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஏ.டி.எம்-களில் புதிய 500, 1000 நோட்டுகள் எப்போது கிடைக்கும்?

ஏ டி எம்-ல் மக்கள் கூட்டம்

ந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 2 லட்சம் ஏ.டி.எம்-களில், ஓரிரு நாளில் 22,500 ஏ.டி.எம்-களில் புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட நவம்பர் 8-ம் தேதி வெளியான தகவல்படி, 3 வாரத்துக்குள் ஏ.டி.எம்-கள் முழுமையாக செயல்படும் என்று மத்திய பொருளாதார  விவகாரத்துறைச் செயலாளர் சக்தி காந்த தாஸ் தெரிவித்தார். ஆனால், அறிவிப்பு வெளியாகி ஒரு வாரம் கடந்த நிலையிலும், 2 லட்சம் ஏ.டி.எம். மையங்களில் பத்தில் ஒரு பங்கு மையங்களிலேயே  புதிய ரூபாய் நோட்டுகள் கிடைக்கும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி டெல்லியில் இன்று தெரிவித்துள்ளார். புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் இப்போதைக்கு வெளியிடப்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம். இயந்திரங்கள் பரிவர்த்தனை செய்யும் வகையில், அவற்றில் 'கணினி புரோகிராமிங்' செய்யப்பட வேண்டும். அப்போதுதான் புதிதாக வெளியிடப்பட்டுள்ள 2,000 ரூபாய் மற்றும் புதிய 500 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் மையங்களில் சாமான்ய மக்கள் பெற முடியும். அதுவரை தற்போது புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே ஏ.டி.எம். மையங்களில் நிரப்ப முடியும். இந்த நிலையில், நாடு முழுவதும் வங்கிகளில் மக்கள் கூட்டம் திரண்டு நின்று தங்களது பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. கசப்பு மருந்து என்றால், அதனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று மத்திய அரசும், அரசை ஆதரிப்பவர்களும் சமாதானம் சொல்லி வருகிறார்கள். சாதாரண மக்கள் பாதிப்புக்குள்ளாவதை எப்படித் தடுக்க முடியும்? என்பது குறித்து ஆக்கபூர்வமான தீர்வுகளை மேற்கொள்ள மத்திய அரசுக்கு நேரமில்லை.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களோ, கோடீஸ்வரர்களோ ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டதாக எந்தத் தகவலும் இல்லை. கோடிக்கணக்கில் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்கள், அதனை எப்படியெல்லாம் சிரமமின்றி மாற்றிக் கொள்ள முடியும் என்பதற்கான வழிமுறைகளை எப்போதோ கண்டுபிடித்து, அதனை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

 ஏ டி எம் மாதச் சம்பளம் வாங்குவோர், சிறுகச் சிறுகச் சேமித்து, அன்றாடத் தேவைக்கு 500 ரூபாய், 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்து செலவிடுவோருக்குத் தான், மத்திய அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிலும் வங்கிகளில் தினமும் 4,500 ரூபாய் மாற்றிக் கொள்ளலாம் என்ற அறிவிப்பை, இன்று திடீரென்று 2,000 ரூபாயாகக் குறைத்து மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஏ டி எம்-களிலும் போதிய அளவு பணம் நிரப்பப்படுவதில்லை,

மொத்தத்தில் இந்தியா முழுவதும் உள்ள மக்கள், தங்களின் அன்றாடத் தேவைக்காக, 'ஏ.டி.எம் கார்டு, கடன் அட்டைகளைப் பயன்படுத்துங்கள்' என்ற நிலைமையை மறைமுகமாக மோடி அரசு புகுத்தியுள்ளது.

வீடுகளில் திருமணம் நடத்துவோர் , வங்கிகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் எடுத்துக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய விலைவாசி மிகுந்த சூழ்நிலையில், இரண்டரை லட்சம் ரூபாய்க்குள் திருமணத்தை எப்படி நடத்தி முடிக்க முடியும்? இவ்வளவு தொகைக்குள் திருமணத்தை முடிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு விதிப்பதைத் தான், மத்திய அரசின் முடிவு தெளிவு படுத்துகிறது.

சட்டவிரோத பணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் நடவடிக்கை என்று பிரதமர் மோடி தெரிவித்தாலும், இந்த அறிவிப்பால் அன்றாடத் தேவையை எதிர்கொள்ள முடியாமல் ஏழை மக்கள், சிறு வியாபாரிகள், விவசாயிகள், வேலைக்குச் செல்லும் பெண்கள் போன்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இப்போதுள்ள நிலையில், அனைத்து ஏ.டி.எம்-களிலும் வழக்கமான பரிவர்த்தனை இயல்பான நிலையை எட்ட,குறைந்தது ஓரிரு மாதங்கள் ஆகலாம் என்பதே நிதர்சனம்!

- சி. வெங்கட சேது

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ