Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூபாய் எட்டு கோடி சேலை... 12500 தொழிலாளர்கள்... ரெட்டி வீட்டு கல்யாணம்! (ஆல்பம்)

ரெட்டி

ரெட்டி குடும்பத்து திருமண புகைப்பட தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்

ம்பானிகளுக்கும், அதானிகளுக்கும் சவால்விடும் வகையில் சுரங்க மாஃபியா ஜனார்தன் ரெட்டி, தனது மகள் பிராமணியின் திருமணத்தை நடத்தி முடித்துள்ளார். அவரது மாப்பிள்ளையான ராஜீவ் ரெட்டியும் சுரங்கத் தொழிலில் கோலோச்சுபவர் என்பதுதான் விஷேசம். பெங்களூரு அருகே 36 ஏக்கர் நிலப்பரப்பில் நடைபெற்ற இந்தத் திருமணத்தில் 30 ஏக்கருக்கு பிரமாண்டமாக பல மாடல்களில் செட் போடப்பட்டிருந்தது. திருப்பதி கோயில் வடிவில் ஒரு செட், தனது குலதெய்வ கோயிலான ஹம்பிகோயில் வடிவில் தாலிகட்டும் ஒரு செட், தனது கிராமத்து வீட்டின் வடிவில் ஒரு செட், விருந்துகள் நடைபெற தனி செட்... என இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் இந்தத் திருமணத்தை நடத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக இதற்கான பணிகள் நடைபெற்றன. பெண்ணின் முகூர்த்தப்பட்டின் விலை மட்டும் எட்டு கோடி ரூபாய் என்கிறார்கள். தங்கத்தால் சரிகை நெய்து, அதில் சிறுசிறு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட சேலையை மணமகள் பிராமணி அணிந்திருந்தார். 

மணமகன் ராஜீவ் ரெட்டியின் முகூர்த்த ஆடையும் விலையுயர்ந்த கற்கள் பதிக்கப்பட்ட ஆடையாகும். சமைக்க, உணவு பரிமாற என 12,500 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தார்கள். 90 கோடி ரூபாய் அளவுக்கு நகைகள் பெண்ணுக்குச் சீதனமாக அளிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் உணவருந்தியுள்ளார்கள். மூன்று நாட்கள் விழாவாக இந்தத் திருமணம் நடைபெற்றுள்ளது. இரவில் நடிகர், நடிகைகள் பங்கேற்ற நாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. தமன்னா, ப்ரித்தா ராய் உள்ளிட்ட முன்னணி நடிகைகளின் நடனங்கள் இடம்பெற்றன. மன்னர்கள் காலத்தைப்போன்ற பணியாளர்களின் சாரட் வண்டிகளும் திருமண விழாவில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. ரெட்டியின் திருமணமே, இப்போது கர்நாடகாவில் ஹாட் டாபிக்காக உள்ளது. 

ரெட்டி குடும்பத்து திருமண புகைப்பட தொகுப்பை காண இங்கே க்ளிக் செய்யவும்

- அ.சையது அபுதாஹிர்
படங்கள்: சு.குமரேசன்

எடிட்டர் சாய்ஸ்

MUST READ