Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வங்கியில் இரண்டரை லட்சம் ரூபாய் செலுத்தினால் வருமான வரி கணக்கு அவசியம்!

மத்திய அரசு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தடை செய்ததை அடுத்து பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எவ்வளவு தொகை பெற வேண்டும் என்பதில் தினம் ஒரு விஷயத்தை வலியுறுத்தி வருகிறது மத்திய அரசு. நேற்று பணம் எடுக்க வருபவர்களின் கைவிரலில் மை வைத்தது. இந்த வரிசையில் தற்போது மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வங்கி சேமிப்பு கணக்கில் ஒருவர் ஒரு நாளில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் வங்கியில் செலுத்தினால் வருமான வரி கணக்கு எண்ணை (‘பான்’ நெம்பர்) தெரிவிக்க வேண்டியது கட்டாயம் ஆகும். எனவே அப்படி பணம் போடுபவர்கள், கடந்த 10–ந்தேதி முதல் டிசம்பர் 30–ந்தேதி வரை தங்கள் வங்கி கணக்கில் ரூ.2½ லட்சமோ அல்லது அதற்கு மேற்பட்ட தொகையையோ செலுத்தி இருந்தால் அவர்கள் தங்கள் வருமான வரி கணக்கு எண்ணை தெரிவிக்க வேண்டியது அவசியம் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ