Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அழியாத மை பயன்படுத்த வேண்டாம்..! மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

வங்கிகளுக்கு பணம் மாற்ற வரும் பொதுமக்களின் கை விரல்களில் அழியாத மை வைக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சகத்துக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்ததோடு, பழைய நோட்டுகளை வங்கிகளில் மாற்றிக்கொள்ளலாம் என்று கூறினார். இதையடுத்து, பொதுமக்கள் வங்கிகளுக்கு சென்று பணத்தை மாற்றி வந்தனர். இதனிடையே, ஒரு நபர் பலமுறை பணத்தை மாற்றி வருவதாக புகார் எழுந்தது. இதையடுத்து, மத்திய நிதியமைச்சகம் பணம் மாற்ற பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.

இந்த நிலையில், பணம் மாற்ற வருபவர்களின் வலது கையில் உள்ள விரலில் மை வைக்கப்பட்டு வருகிறது. அதுவும் அழியாத மை பொதுமக்களுக்கு வைக்கப்பட்டு வருகிறது. தப்பித்தவறி தவறுதலாக இடது கை விரலில் மை வைத்தால் தற்போது நடைபெற உள்ள 3 சட்டமன்ற தொகுதி வாக்காளர்கள் வாக்களிக்க முடியாது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று அதிரடியாக அறிவித்தார்.

இதனிடையே, மத்திய நிதியமைச்சகத்துக்கு தலைமை தேர்தல் ஆணையம் இன்று கடிதம் எழுதியுள்ளது. அதில், இந்தியாவில் பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், வங்கிகளுக்கு பணம் மாற்ற வரும் பொதுமக்களின் கை விரல்களில் அழியாத மை வைக்கப்பட்டு வருகிறது. இந்த அழியாத மையை வங்கிகள் பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்த வேண்டும். தேர்தலின் தனித்துவம் வாய்ந்த அம்சங்களில் மை வைப்பது ஒன்று. தேர்தலில் வாக்களிப்போருக்கு மை வைப்பது என்பது வழக்கமாக உள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close