Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பழைய நோட்டு, மீனவர்கள் விவகாரத்தால் முடங்கியது நாடாளுமன்றம்

பழைய நோட்டு மற்றும் மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளின் அமளியால் நாடாளுமன்ற இருஅவைகளும் நண்பகல் வரை முடங்கியது.

மக்களவை இன்று காலை கூடியதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கையை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கை பகல் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் இரு அவைகளும் கூடியது. அப்போது அமளி ஏற்பட்டதால் மாநிலங்களவை நண்பகல் 12.33 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் தொடர்ந்து அமளி ஏற்பட்டது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close