Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கொலிஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை நியமிக்க மத்திய அரசுக்கு உத்தரவு

கொலிஜியம் பரிந்துரைத்த  43 நீதிபதிகளை உயர் நீதிமன்றங்களுக்கு நியமனம் செய்ய முடியாது என்று மத்திய அரசு  மறுப்பு தெரிவித்ததை ஏற்றுக் கொள்ள முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் 43 நீதிபதிகள் பெயர்களை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 

நீதிபதிகளை அரசு தேர்ந்தெடுக்கக் கூடாது என்றும் கொலிஜியம் முறைப்படியே தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. 

கடந்த நவம்பர் 11-ம் தேதி, கொலிஜியம் (collegium) பரிந்துரைத்த 77 நீதிபதிகளில் 34 நீதிபதிகள், உயர் நீதிமன்றங்களுக்கு  நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் 43 பெயர்களை மறுபரிசீலனை செய்யும்படி  உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருந்தது.  இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், மத்திய அரசு கொலிஜியம் பரிந்துரைத்த  43 நீதிபதிகளையும் நியமிக்க மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 

 

எடிட்டர் சாய்ஸ்