Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

கறுப்புப்பணத்தை மாற்ற பிறர் வங்கிக்கணக்கை பயன்படுத்தினால்.. மத்திய அரசு எச்சரிக்கை

கறுப்புப் பணத்தை மாற்ற பிறரின் வங்கிக் கணக்கைத் தவறாக பயன்படுத்துவோருக்கு மத்திய நிதியமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது குறித்து நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “வியாபாரிகள், பெண்கள், தொழிலாளர்கள்  தங்கள் சிறு சேமிப்பு தொகைகளை பற்றி அரசு கேள்வியெழுப்பாது. ஆனால் சிலர் கறுப்புப் பணத்தை மாற்ற பிறரின் வங்கிக் கணக்குகளை தவறாக பயன்படுத்துவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது போன்ற வரி ஏய்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள். கறுப்புப்பணத்தை மாற்ற தங்கள் வங்கி கணக்குகளை வழங்குவோர்களும் தண்டிக்கப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ