Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பழைய ரூபாய் நோட்டு விவகாரத்தால் முடங்கியது மாநிலங்களவை 

எதிர்க்கட்சிகளின் அமளியால் மாநிலங்களவை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை இன்று காலை கூடியதும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் மாநிலங்களவையில் எதிரொலித்தது. அதிமுக உறுப்பினர்கள் அவைத் தலைவரின் இருக்கையை முற்றுகையிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து அவை நடவடிக்கை பகல் 11.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அவை கூடியதும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கையை வரும் 21-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ