Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை பார்த்த வங்கி மேலாளர் மரணம்

 

ஹரியானாவில் ரோதக் நகரின் கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரியும் ராஜேஷ் குமார், வேலைப்பளுவால் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். ரூபாய் நோட்டுகள் தொடர்பான அரசின் உத்தரவுக்குப் பிறகு மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை பார்த்திருக்கிறார் இதய நோயாளியான ராஜேஷ். மூன்று நாட்களும் வீட்டுக்குச் செல்லாமல், அலுவலகத்திலேயே இரவு தூங்கியுள்ளார். 

கடந்த செவ்வாய்க்கிழமை ஆஃபீஸிலேயே தூங்கியவருக்கு நள்ளிரவில் மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. புதன்கிழமை அதிகாலையில் வந்த செக்யூரிட்டி கதவை உடைத்து திறந்து பார்த்தபோதுதான் ராஜேஷ் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ