Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'கலவரங்கள் ஏற்படும்'- மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மத்திய அரசை இன்று வெளுத்து வாங்கியது. உயர் நீதிமன்றங்களிலும், கீழ் கோர்ட்டுகளிலும் மத்திய அரசின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை தடை செய்ய மறுத்துவிட்டது உச்ச நீதிமன்றம். வேண்டுமானால், அத்தனை வழக்குகளையும் ஒரே உயர் நீதிமன்றத்துக்கு டிரான்ஸ்ஃபர் செய்து விசாரிக்கலாம் என்றது. 'மக்கள் இவ்வளவு பெரிய சிக்கலில் இருக்கும்போது, எப்படி எங்கள் கதவுகளை மூட முடியும்?' என்றனர் நீதிபதிகள். 

மேலும்,  'மக்கள் பதற ஆரம்பித்து விட்டார்கள். விஷயம் சீரியஸ் ஆகிவிட்டது. கலவரங்கள் கூட நடக்கலாம்!' என்று எச்சரித்தனர் நீதிபதிகள். 

இதற்கு  அட்டர்னி ஜெனரல் ரோஹத்கி, 'மக்கள் பொறுமையாகத்தான் வரிசையில் நின்று பணம் பெற்றுச் செல்கிறார்கள்!' என்று சொல்ல, நீதிபதிகளோ, 'இல்லை..மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள். சிரமப்படுகிறார்கள். இதை நீங்கள் மறுக்க முடியாது!' என்றனர் நீதிபதிகள். 

Stay Updated with Tamil Flash News - Facebook's 'FbStart' Tamil APP

இந்தியா சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷனில் தெரிந்துகொள்ளலாம். இதுதான் நம்பர் ஒன் தமிழ் நியூஸ் ஆப்!

பயன்படுத்த க்ளிக் http://bit.ly/FreeTFN

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close