Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

குடியரசுத் தலைவர் - பிரதமர் திடீர் சந்திப்பு!

டெல்லியில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை, பிரதமர் நரேந்திர மோடி திடீரென சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

பழைய 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது, என மத்திய அரசு கடந்த 8-ம் தேதி இரவு அறிவித்தது முதல், வரலாறு காணாத வகையில் நாட்டில் முற்றிலுமாக பணப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, கடந்த 11 நாட்களாக நாடெங்கிலும் பணப்பரிவர்த்தனை பெரியளவில் முட‌ங்கியதுடன், பெரிய தொழில்கள் முதல், சிறு மற்றும் குறு தொழில்கள் வரை மிகப்பெரிய அளவில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.

மேலும், கடந்த பத்து நாட்களில் வங்கியில் வரிசையில் நின்று பணம் மாற்ற முயன்ற பொதுமக்கள் மற்றும் ஊழியர்கள் உள்பட இதுவரை 40 பேர் வரை இறந்துள்ளனர் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இவற்றுடன் மத்திய அரசுக்கு எதிராக நாட்டில் போராட்டம் வெடிக்கும் சூழலும் நிலவுவதாக இன்று திடீரென செய்திகள் பரவின. இதனால், நாட்டில் நிலவும் நெருக்கடி நிலையை சமாளிக்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினார் என டெல்லி வட்டாரங்கள் கூறுகின்றன. 
 

எடிட்டர் சாய்ஸ்