Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பாட்னாவில் ரயில் தடம்புரண்டு விபத்து

இன்று அதிகாலை மூன்று மணி அளவில், உ.பி மாநிலத்தின் பாட்னா அருகே பாட்னா - இந்தூர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் ரயிலின் 14 பெட்டிகள் சேதமடைந்தன. S2 பெட்டிதான் முழுவதும் உருக்குலைந்துள்ளது. 

இந்த விபத்தில் சிக்கி இதுவரை 45 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலி எண்ணிக்கை உயரும் என்கின்றனர் ஸ்பாட்டில் உள்ள அதிகாரிகள். நிறைய பேர் படுகாயமும் அடைந்துள்ளனர். 

(காலை 11 மணி அப்டேட் - இப்போது பலி எண்ணிக்கை 96 ஆக உயர்ந்துள்ளது. 76 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய், படுகாயம் அடைந்தோரின் குடும்பத்துக்கு ஐம்பதாயிரம் ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளார் பிரதமர்)  

இதே பாதையில் செல்ல இருந்த ரயில்கள் இப்போது திருப்பி விடப்பட்டுள்ளன. உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், அம்மாநிலத்தின் டி.ஜி.பியை சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்டுள்ளார். 

விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வருத்தம் தெரிவித்துள்ளனர். 

 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ