Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

2000 ரூபாய் நோட்டை கலர் ப்ரின்ட் அடித்து பொருட்கள் வாங்கிய 13 வயது சிறுமி

ரூபாய்

நாட்டின் பொருளாதாரத்தைச் சிதைக்கும் கறுப்புப்பணம் மற்றும்  கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிப்பதற்காக ஏற்கெனவே புழக்கத்தில் விடப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறுவதாக மத்திய அரசு கூறியது. எண்ணிக்கை அளவில்  400 கோடி கள்ள நோட்டுகள் நாட்டில் புழக்கத்தில் இருப்பதாக தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) ஏற்கெனவே எச்சரித்திருந்தது. அதிக மதிப்புடைய இந்த நோட்டுகளின் தடையால் கறுப்புப் பணம் ஒழிகிறதோ இல்லையோ, கள்ள நோட்டுகள் நிச்சயம் ஒழியும். பழைய நோட்டுகளில் இருந்து பாடம் கற்ற அரசு, புதிய நோட்டுகள் அறிமுகப்படுத்தும்போது பல பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தியிருக்கவேண்டும். ஆனால், புதிய நோட்டுகள் அச்சடிக்கப் போதிய நேரம் இல்லாததால், புதிய நோட்டுகளில் பாதுகாப்பு வழிமுறைகளை ஏற்படுத்தவில்லை என மத்திய அரசே ஒப்புக்கொண்டுள்ளது. 

இந்நிலையில்,  புதிய 2000 நோட்டு போலவே போலி நோட்டுகள் அச்சடிக்கப்பட்டது குறித்த தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கினறன. இதன் உச்சமாக கேரள மாநிலம் திரிச்சூரில் 13 வயதான சிறுமி போலி 2000 ரூபாய் நோட்டைக் கொடுத்து கடையில் பொருட்களை வாங்கிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

 புதிய 2000 ரூபாய் நோட்டினை இன்னும் பல லட்சகணக்கான மக்கள் பார்க்கவில்லை. பிடிபட்ட சிறுமியிடம் போலீஸார் விசாரித்ததில், வீட்டில் பயன்படுத்தும் ஸ்கேனர் மூலம் ஒர்ஜினல் 2000 ரூபாயினை ஸ்கேன் செய்து கலர் பிரிண்டர் மூலம் போலி 2000 ரூபாயினை அச்சடித்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.  போலி நோட்டினை கொடுத்து ஒரு கடையில் 500 ரூபாய்க்கு பொருட்களை வாங்கி, மீதி 1500 ரூபாய் சில்லறை கேட்டுள்ளார்.

அந்தக் கடைகாரரிடம் சில்லறை இல்லாததால், அருகில் இருந்த பேக்கரிக்கு சில்லறை மாற்றச் சென்றுள்ளார். பேக்கரி உரிமையாளருக்கு அந்த நோட்டினை பார்த்தவுடன் சந்தேகம் வர, உடனே காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் போலி நோட்டினை கைப்பற்றியதுடன், அச்சிறுமியையும் கைது செய்தனர் என மாத்ரூபூமி  செய்தி வெளியிட்டு இருக்கிறது

 2000 ரூபாய் நோட்டு மக்களிடம் புழக்கத்தில் வந்த இரண்டாவது நாளே போலி நோட்டுகள் வெளிவந்தன. கர்நாடகா மாநிலத்தில் ஒருவர் பிரிண்டரில் அச்சடிக்கப்பட்ட 2000 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்து, கடையில் 1700 ரூபாய்க்கு பொருட்களை வாங்கியுள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் ப்ரிண்டர் மூலம் 2000 ரூபாயினை அச்சடித்த  ஜெராக்ஸ் கடை உரிமையாளர்கள் சந்தீப் குமார், ஹர்ஜிந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்தில், டாஸ்மாக் கடையில் ஜெராக்ஸ் 2000 ரூபாய் கொடுத்து, ஒருவர் 300 ரூபாய்க்கு மதுபானங்களை வாங்கிவிட்டு 1,700 ரூபாய் சில்லறையையும் வாங்கிச் சென்றுள்ளார்.

 மக்களே உஷார் உஷார்..

 - ஆ.நந்தகுமார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close