Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'2022-க்குள் அனைவருக்கும் வீடு, பண பிரச்னைக்கு விரைவில் தீர்வு' - மோடி

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்,பிரதமர் நரேந்திர மோடி 'பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா' திட்டத்தை துவங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது, 'இத்திட்டத்தின் கீழ் 2022-க்குள்  அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். விவசாயிகள் முதல் பழங்குடியினர் வரை அனைவருக்கும் வீடு கட்டித்தரப்படும். இந்த திட்டம் குடிசை பகுதி மக்களுக்கு சமர்ப்பிக்கப்படும். கறுப்புப் பணத்தை ஒழிக்க ஏழை மக்கள் அரசுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். அவர்களின் தியாகம் வீண் போகாது. சீட்டு நிறுவனங்களை மக்கள் ஊக்குவிக்க வேண்டாம். இதுவரை ரூ 5 லட்சம் கோடி வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டு வழங்குவதில் உள்ள சிக்கல்களை கண்காணித்து வருகிறேன்.

பணப்பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். கறுப்புப் பணம் தீவிரவாதிகளுக்கு சென்று கொண்டிருந்தது. ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் மக்களின் பணத்தை பறிக்கின்றனர். ஏழைகளுக்கு கிடைக்க வேண்டிய யூரியா பண்ணையாளர்களுக்கு கிடைத்து வந்தது. அது தற்போது தடுக்கப்பட்டுள்ளது. எனது கடுமையான நடவடிக்கையால் அவர்கள் என் மீது கோபத்தில் உள்ளனர். ஏழை, விவசாயிகளின் நிலை எந்த விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். ஏற்கெனவே நிலைமையை சீர் செய்ய மக்களிடம் 50 நாட்கள் அவகாசம் கேட்டிருந்தேன். அந்த 50 நாட்கள் மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள்'.  என்று பேசினார்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close