Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'வங்கிகளில் இஸ்லாமியர்களுக்கு தனிப் பிரிவு'- ஆர்பிஐ பரிந்துரை

இஸ்லாமியர்களுக்கு வங்கிகளில் தனிப் பிரிவு ஆரம்பிப்பது பற்றி நிதி அமைச்சகத்துக்கு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. 

இஸ்லாமிய மத வழக்கத்தின்படி ஷரியா வங்கி என்பது, வட்டி இல்லாமல் வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகும். ஆர்பிஐ தற்போது, இஸ்லாமியர்களுக்கு தனியாக வங்கி ஆரம்பிப்பது பற்றி பரிந்துரை செய்யவில்லை என்றாலும், வங்கிகளில் தனிப் பிரிவு ஆரம்பிப்பது பற்றி யோசித்து வருகிறது. இதன் மூலம், மத காரணங்களால், வங்கி நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்கும் ஒரு பிரிவினரை உள்ளே கொண்டு வர முடியும் என்கிறது ஆர்பிஐ.

'இஸ்லாமியர்களுக்கு என்று தனிப் பிரிவு கொண்டு வருவது சவாலான விஷயம் தான். காரணம், அதில் நம் வங்கிகளுக்கு அனுபவம் இல்லை. இதனால், இஸ்லாமியர்களுக்கான தனி வங்கி மெதுவாகவே கொண்டு வர முடியும். வட்டி மற்றும் லாப-நஷ்டம் இல்லாத இஸ்லாமிய வங்கிகளை பெருமளவு கொண்டு வருவது நம் அனுபவத்தைப் பொறுத்தே அமையும்' என்று கூறியுள்ளது ஆர்பிஐ. 

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ