Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மளிகை பொருட்கள் விற்பனையில் நுழைய உள்ளது Flipkart

இந்தியாவில் இணைய வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் ஃப்லிப்கார்ட், மளிகை பொருட்கள் விற்பனையில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது பற்றி அதன் தலைமை நிர்வாகி பின்னி பன்சால்,'லாபம் தரக்கூடிய வகையில் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்ய முடியும் என்றாலும், அது கடினமான பணிதான். இருப்பினும் சாத்தியமற்றது அல்ல.' என்று கூறியுள்ளார்.


மளிகை பொருட்கள் விற்பனையை அடுத்த ஆண்டு சோதனை முறையில் தொடங்க உள்ளதாக ஃப்லிப்கார்ட் தெரிவித்துள்ளது. ஃப்லிப்கார்ட் நிறுவனத்துக்கு அனைத்து மட்டங்களிலும் போட்டியாளராக உள்ள அமேசான் நிறுவனம், மளிகைப் பொருட்கள் விற்பனையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close