Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மல்லையாவுக்கு இருக்கும் சலுகை எனக்கு இல்லையா?- வங்கியை உலுக்கும் துப்புரவுத் தொழிலாளி!

6 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டில் போய் செட்டிலாகி விட்ட விஜய் மல்லையாவின் கடன் தொகையை எஸ்பிஐ வங்கி ரத்து செய்து விட்டதாக செய்தி அண்மையில் பரவியது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது. கணக்கில் காட்டப்படாத வாராக்கடனாக அது இருக்கும் என்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜேட்லி விளக்கம் அளித்துள்ளார்.  எஸ்பிஐ வங்கியும் விஜய் மல்லையாவிடம் இருந்து கடனை வசூலிக்காமல் விட மாட்டோம் என சூளுரைத்துள்ளது. ”நீங்கள் என்னமும் பேசிட்டு போங்க... கடன் கட்டுறதை பற்றி நான்தான் முடிவு செய்ய வேண்டும்” என மல்லையா லண்டனில் கூறி இருக்கிறார். 

மல்லையா

இந்த சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த துப்புரவுத் தொழிலாளி ஒருவர் “ விஜய் மல்லையாவுக்கு மட்டும் தான் சலுகையா? எனது ஒன்றரை லட்சம் கடனையும் எஸ்பிஐ ரத்து செய்ய வேண்டும்” என எஸ்பிஐ வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாசிக் மாவட்டத்தில் உள்ள ஒரு  நகராட்சியில் துப்புரவுத் தொழிலாளியாகப் பணிபுரிபவர் பாவுராவ் சோனாவன். இவர் அங்குள்ள எஸ்பிஐ வங்கியில் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதனை நேர்மையாக அடைக்கவும் முயற்சித்து வந்தார். 

இந்த நிலையில், விஜய் மல்லையாவின் கடனை எஸ்பிஐ வங்கி ரத்து செய்ததை கேள்விப்பட்ட பாபுராவ், எஸ்பிஐ வங்கிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில்,  ''மல்லையாவின் கடனை ரத்து செய்தது நல்ல முடிவு. அதேபோல் எனது ஒன்றரை லட்ச ரூபாய் கடனையும் ரத்து செய்யதால் நான் மகிழ்ச்சி அடைவேன்'' என தெரிவித்துள்ளார். 

''நான் எனது மகனின் உடல்நிலை சரியில்லாமல் போனதற்காக லோன் வாங்கினேன். மல்லையாவின் கடனை ரத்து செய்யும் போது எனது கடனை ரத்து செய்யக் கூடாதா? எனக் கேள்வி கேட்டுள்ளேன். இன்னும் வங்கியிடம் இருந்து பதில் கடிதம் வரவில்லை'' என்றார் 

கடன் வாங்கிய பாவப்பட்ட விவசாயிகளின் டிராக்டர்களை பறிப்பது. கூலித் தொழிலாளியின் சொத்துக்களை முடக்குவது போன்ற விஷயங்களில் ஈடுபடும் வங்கிகள் பணக்காரர்களின் கடனை மட்டும் தள்ளுபடி செய்வதற்கு ஏதாவது சந்தர்ப்பம் கிடைக்காதா என காத்திருக்கின்றன. பாபுராவின் கேள்வியில் நியாயம் இருப்பதாகவே தோன்றுகிறது. 
 

- எம்.குமரேசன்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

'சாக்கடையில் கலந்த ஜெயலலிதா ரத்தம்!'   -எம்பால்மிங் சீக்ரெட்டை உடைக்கும் மருத்துவர்கள் #VikatanExclusive
placeholder

'இருதயம் செயலிழந்து போனதற்கான காரணம் என்ன? திடீரென்று செயலிழந்து நின்று போன இருதயத்தை ஏன் மீண்டும் செயல்பட வைக்க இயலவில்லை? உலகத் தரம் வாய்ந்த உபகரணங்களையும் நிபுணத்துவத்தையும் தோல்வியைத் தழுவச் செய்த காரணங்கள் யாவை?' என்ற கேள்விகளையே மருத்துவர் பீலேயும் அப்போலோ மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்களும் தமிழக-இந்திய மருத்துவ உலகத்தாரும் தமிழ்நாடு-மத்திய அரசுகளும் கேட்டிருக்க வேண்டும். அதற்கான பதிலைக் கண்டறிய இயன்றளவில் முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கான ஒரு சிறிய துரும்பு அளவிலான முயற்சியைக்கூட இவர்கள் எவரும் மேற்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை.

Advertisement

MUST READ

Advertisement
[X] Close