Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிசிசிஐ நிர்வாகிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும்: லோதா கமிட்டி அதிரடி

 

 

 

பிசிசிஐயில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

ஐ.பி.எல் கிரிக்கெட்டில் ஏற்பட்ட சூதாட்ட புகாரையடுத்து கிரிக்கெட் வாரியத்தில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து முன்னாள் நீதிபதி லோதா தலைமையில் உச்ச நீதிமன்றம் கமிட்டி ஒன்றை அமைத்தது. இந்நிலையில் பிசிசிஐ நிர்வாகத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் லோதா கமிட்டி பரிந்துரை செய்துள்ளது.

மேலும் முன்னாள் மத்திய உள்துறைச் செயலாளர் ஜி.கே. பிள்ளையை பிசிசிஐ சிறப்பு பார்வையாளராக நியமிக்க வேண்டும் என்றும், அவருக்கு தணிக்கை, ஊழியர்கள் நியமன அதிகாரம் வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

ஜெயலலிதா வாழ்வின் சில ‘கடைசி’கள்!

MUST READ