Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ஆந்திர சிறையில் உள்ள 32 தமிழர்களுக்கு ஜாமீன்

ஆந்திராவில் செம்மரம் வெட்டியதாக கூறி 32 தமிழர்களை கடந்த ஆகஸ்ட் மாதம் ஆந்திர வனத்துறை மற்றும் காவல் துறையினர் கைது செய்தனர். இவர்கள் அனைவரும் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்கள் ஆவர். இந்நிலையில் இவர்கள் ஜாமீன் வேண்டி ஆந்திர நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை இன்று விசாரித்த திருப்பதி அமர்வு நீதி மன்றம், கைது செய்பட்டு சிறையில் உள்ள 32 தமிழர்களுக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இன்னும் சில தினங்களில் 32 தமிழர்களும் தமிழ்நாடு திரும்புவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ