Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இந்தியாவின் சக்திவாய்ந்த அக்னி-1 சோதனை வெற்றி !

அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக் கூடிய, அதிக திறன் கொண்ட, அக்னி-I ஏவுகணை சோதனை, வெற்றிகரமாக ஒடிசா ஏவுதளத்தில் இன்று நடந்துள்ளதாக இந்திய பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

 

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ஏவுகணையான அக்னி-I,  தரையில் இருந்து 350 கி.மீ.,தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறனுடையது.  500 முதல் 1,000 கிலோ வரை எடையுள்ள ஆயுதங்களைத் தாங்கிச் செல்லும் திறன் கொண்டது.

இதே ஒடிசா ஏவுதளத்தில் நேற்று, இந்தியாவின் மற்றொரு சக்தி வாய்ந்த ஏவுகணையான பிரித்வி-2 சோதனை வெற்றிகரமாக நடந்தது குறிப்பிடத்தக்கது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ