Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மை முதல் மல்லையா வரை... கறுப்புப் பணமும் நெட்டிசன்களும்!

நாட்டில் என்ன நடந்தாலும் இந்த ஃபேஸ்புக், ட்விட்டர் போராளிகளுக்கு மட்டும் எந்தப் பங்கமும் இல்லாமப் பொழைப்பு சிறப்பா நடந்துக்கிட்டே இருக்கும். திங்கட்கிழமையா இருந்தாலும் சரி... ஊரே ரெஸ்ட் எடுத்து ரெஸ்ட் எடுத்து டயர்டாகித் தூங்குற ஞாயிற்றுக்கிழமையா இருந்தாலும் சரி... யாரையாவது இழுத்துப்போட்டு அடிச்சு மங்களகரமா எல்லா நாளையும் தொடங்குவாய்ங்க. ஆனா பாருங்க கறுப்புப் பண அறிவிப்பால் இது கவர்மென்ட்டையே கலாய்க்கிற சீசன் போல. #தட் அந்த ஆண்டவனுக்கே ஒரு சோதனைனா மொமென்ட்.

கறுப்புப் பணம்

மோடி ஐந்நூறு, ஆயிரம் நோட்டுகளைச் செல்லாதுனு அறிவிச்சாலும் அறிவிச்சார். அதிலிருந்து தினம் தினம் அப்டேட் நியூஸ்களாகவே வந்து நெட்டிசன்களை அமோகமாக வாழ வைக்குது. முதல்நாள் அரக்கப்பறக்க அறிவிப்பைப் பாராட்டிச் சிலாகிக்க ஆரம்பித்து, அப்புறம் அப்படியே அதிர்ச்சியாகி எதிர்ப்பக்கம் திரும்பி என்னடா அறிவிப்பு இதுனு கலாய்த்துத் தள்ளி லைம்லைட்லேயே இருந்தாய்ங்க. 

இந்த மேட்டர் நெருப்பு அணைஞ்சுடாமப் பொத்திப்பொத்தி வெச்சு ஏ.டி.எம் வாசலில் காத்துக்கிடக்கும் மக்களை வைத்து அடுத்த அட்டெம்ப்ட்டை நடத்திக்கொண்டிருக்கும்போதே பஞ்சுமிட்டாய் கலர் 2000 நோட்டில் சாயம் போகுதுனு அடுத்த ஆயுதத்தை ரெடி பண்ணி ஸ்டேட்டஸ் தட்ட ஆரம்பிச்சுட்டாய்ங்க.

அதுவும் பழசானதும் போராளிகள் சும்மா இருந்தாலும், இந்தச் சமூகம் சும்மா இருக்க விடாதுனு சும்மாவா சொன்னாய்ங்க... (என்ன இன்னிக்கி ரொம்ப ரோலாவுது?) ஸ்டேட் பேங்க்ல மல்லையா வாங்கின கடனைக் கட்ட வேணாம்னு தள்ளுபடி பண்றதா அறிவிச்சு நெட்டிசன்களுக்கு டபுள் பொனான்ஸா ஸ்டேட்டஸ்களை அள்ளிக்கொடுத்ததும் இல்லாம சிவனேனு வெளிநாட்டு ரெசார்ட்டில் ரெஸ்ட் எடுத்துக்கொண்டிருக்கும் மல்லையாவையும் திட்டித் திட்டியே புரையேற வைத்தார்கள். #அங்க அத்த அரிசி வாங்கக் காசில்லாம அல்லாடுது. ஆட்டக்காரிக்கு ஐந்நூறு ரூபாயா? 

கறுப்புப் பணம்

ஏ.டி.எம் வாசலில் நாள் பூரா காத்துக்கிடக்கும் மக்கள் பணம் எடுக்க ஒருபக்கம் அல்லாடிக்கொண்டிருக்க, பேங்க்கில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற வந்தவங்களே திரும்ப வரக் கூடாதுனு மக்கள் நலனுக்காக(?) அரசாங்கம் ப்ளான் பண்ணி கைவிரலில் மை வைக்கும் ஐடியாவைக் கையில் எடுத்தது. அதை வங்கி ஊழியர்களே எதிர்த்தது வேறு கதை. அதை வைத்து ரெண்டுநாள் ஊறப்போட்டு அடிக்க...

கறுப்புப் பணம்

இப்போ என்னடான்னா, பணம் மாற்ற பேங்குக்குப் போனாலே பணம் தீருதோ இல்லையோ, மை தீர்ந்திடுச்சு, மை வைக்கிற குச்சி உடைஞ்சிடுச்சுனு காரணத்தைச் சொல்லி, அதுக்குள்ள காசே காலாவதி ஆகிருமோனு நம்மைக் கலவரமாக்கிட்டு அவிங்க கூலாகிடுறாய்ங்க. சம்பவம் ஆரம்பிக்கிறப்போ கூட்ட நெரிசல்ல வேலை பார்த்துப் பாவமாகத் தெரிஞ்ச ஊழியர்கள் எல்லோரும் இப்போ நெட்டிசன்ஸ் மீம்ஸுக்கு இரையாகிக் கிடக்கிறாங்க.

அடுத்து என்ன நடக்கப் போகுதோ... அரசு என்ன அறிவிப்பைக் கிளப்பப் போகுதோ...  என்னத்தையெல்லாம் வெச்சு வெளையாடப் போறாய்ங்களோன்னு அவனவன் பீதியிலே கிடக்குறதுக்கு இடையிடையே இருக்கும் ஒரே ஆறுதல், 'சிங்கம் 3' டீஸர், '2.0 ஃபர்ஸ்ட் லுக்'னு ரிலீஸ் பண்றதுதான்! 

- விக்கி 

எடிட்டர் சாய்ஸ்