Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

தீவிரவாதிகளிடம் ரூ.2,000 ரூபாய் நோட்டுகள்

இந்திய ராணுவம் நடத்திய என்கவுன்ட்டரில் ஜம்மு- காஷ்மீர் பண்டிபோரா பகுதியில் இரண்டு தீவிரவாதிகள் இன்று சுட்டுக்கொல்லப்பட்டனர்.  இந்நிலையில் அவர்கள் தங்கி இருந்த இடத்தில் ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டன. மேலும் அவர்களது இடத்தில் இருந்து ரூ.15,000 பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் இரண்டு 2,000 ரூபாய் நோட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், ரூ.11,000 மதிப்பிலான 100 ரூபாய் நோட்டுகளும் அவர்களின் இடத்தில் மீட்கப்பட்டது. குறிப்பாக இவர்கள் லஷ்கர்-இ-தொய்பாவின் தீவிரவாதிகளாக இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. முக்கியமாக  கடந்த சில தினங்களுக்கு முன்பு அவர்கள் தங்கி இருந்த பகுதி அருகே உள்ள ஒரு வங்கியில் முகமூடி அணிந்த இரண்டு மர்ம நபர்கள் ஆயுதங்களைக் காட்டி பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றியுள்ளனர். 

மேலும் கடந்த மாதம் மற்றொரு வங்கியில் ரூ.2.25 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த சம்பவங்களில் ஈடுபட்டது இவர்கள் தானா? என்றும் விசாரணை நடத்தி வருகின்றனர். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ