Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழப்பு

ஜம்மு- காஷ்மீரின் மச்சல் பகுதியில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

ஜம்மு- காஷ்மீர் எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக இன்று காலை பண்டிபோரா பகுதியில் நடைபெற்ற என்கவுன்ட்டரில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், ஜம்மு- காஷ்மீரின் மச்சல் பகுதியில் இந்திய ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே மீண்டும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் மூன்று ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவற்றில் ஒரு வீரரின் உடல் சிதைந்த நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close