Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இனி பிக்பஜாரிலும் பணம் பெறலாம்!

டெபிட் கார்டுகள் மூலம்  பிக்பஜாரிலும் பணம் பெறலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் அறிவிப்பைத் தொடர்ந்து புதிய நோட்டுகள் வங்கிகள், தபால் நிலையங்களில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில்  டெபிட் கார்டுகள் மூலம் பிக் பஜாரில் பணம் பெறலாம் என மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் உள்ள பிக்பஜார்களில் வருகின்ற 24-ம் தேதி முதல்  டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ரூ.2,000 பெறலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. டெபிட் மற்றும் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பெட்ரோல் பங்க்குகளில் பணம் பெறலாம் என்ற அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ