Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கறுப்புப் பணத்துக்கு ஆதரவாக இருப்பவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் - பிரதமர் நரேந்திர மோடி!


500, 1000 ரூபாய் செல்லாது என மத்திய அரசு அறிவித்த பிறகு பொதுமக்கள் பலரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு உத்தரவை பணம் மாற்றுவதிலும் ஏடிஎம் மூலமாக எடுப்பதிலும் அறிவித்து வருகிறது மத்திய அரசு. இந்நிலையில், கறுப்புப் பண ஒழிப்பை தடை செய்ய வேண்டும் எனவும் இதற்கு எதிராக சிலர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசிய போது, 'நாட்டின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டுதான் கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

கறுப்புப் பண ஒழிப்பில் ஈடுபடாமல் அதற்கு சிலர் ஆதரவு அளித்து வருகின்றனர். இது நாட்டுக்கு துரதிஷ்டவசமானது. மக்கள் என்றுமே அவர்களை மன்னிக்க மாட்டார்கள். இந்த விஷயத்தில் எப்போதுமே சமரசத்துக்கு இடம் கிடையாது' என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close