Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

ரூ. 6 லட்சம் கோடிக்கு மேல் டெபாசிட் !

பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் இதுவரை ஆறு லட்சம் கோடி ரூபாய் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டது. இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும்,  அனைத்து வழக்குகளையும் உச்சநீதிமன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. 

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விசாரணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும் நீதிபதிகள் மத்திய அரசு தரப்பை விளக்கம் கேட்டனர். அதற்கு பதில் அளித்த  அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, ’முன்பை விட தற்போது நிலைமை சீரடைந்துள்ளது. வங்கிகளில் இதுவரை 6 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது’ எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீதான அடுத்த கட்ட விசாரணை டிசம்பர் 2 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ