Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மோடிக்கு எதிரான இந்தியர்களை ஈர்க்க பாகிஸ்தான் முயற்சி

காஷ்மீர் பிரச்னையை சர்வதேச அளவில் முன்னிலைப்படுத்த, பாகிஸ்தான்  அரசு உயர்மட்டக் குழு ஒன்றை அமைத்துள்ளதாக Dawn பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி  மோடியின் கொள்கைகளுக்கு எதிரான இந்தியர்களை அணுகி உதவி கேட்க பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
ஒரு நிகழ்ச்சியில் பேசிய பாகிஸ்தான் உயர்மட்ட வெளியுறவு அதிகாரி சர்தாஜ் அஜிஸ் , ’காஷ்மீரிகளின் சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்ல பாகிஸ்தானின் வெளிநாட்டு செயலாளர்  அய்சிஸ் சவுத்ரி தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் உள் விவகாரங்களில் இந்தியாவின் தலையீட்டைப் பற்றி அறிக்கை தயாரிக்கப்படும். இந்தியாவில் மோடியின் கொள்கைகளில் ஈடுபாடில்லாதவர்களை அணுக முயற்சி நடந்து வருகிறது’, எனப் பேசியதாக Dawn செய்தி வெளியிட்டுள்ளது. 

பாகிஸ்தான் உயர்மட்ட வெளியுறவு அதிகாரி சர்தாஜ் அஜிஸ், இந்தியாவில் நடைபெற உள்ள மாநாட்டில் கலந்துகொள்ள இந்தியா வர உள்ளதாக அறிவித்திருந்தார். இந்த பயணத்தின்  மூலம், இந்தியா-பாகிஸ்தான் இடையே உள்ள கொந்தளிப்பை தணிக்க முயற்சி செய்ய உள்ளதாக அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ