Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மேற்குவங்கத்தில் குழந்தை கடத்தல் கும்பல் கைது!

 

மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிறந்த பச்சிளங்குழந்தைகள் எடை குறைவினால் இறந்து விட்டதாகக் கூறி, 30-க்கும் மேற்பட்ட குழந்தைகளை ஏஜென்ட்கள் மூலம் விற்கப்பட்டது தெரியவந்தது.

குழந்தை இல்லாத தம்பதியனருக்கு ரூ.1 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை குழந்தைகளை விற்றுள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்கும் இந்த கும்பல் குழந்தைகளை விற்றுள்ளது.

நாடு முழுவதும் அதிர்வலைகளை எழுப்பிய இந்த சம்பவம் தொடர்பாக, போலீசார்  தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்தக் கும்பலைச் சேர்ந்த 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும், பிஸ்கட் கொண்டு செல்லும் பாக்ஸில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு குழந்தைகளையும் போலீசார் மீட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ