Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வங்கிகளில் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்றே கடைசி நாள்

500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக கடந்த 8-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து வங்கிகள் மற்றும் தபால் நிலையங்களில் பழைய நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள், வங்கிகள் மற்றும் தபால்நிலையங்களில் பழைய 500,1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு இன்றே கடைசி நாள் ஆகும்.அதன்படி, வங்கி கணக்கு இல்லாதவர்கள் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள்.  நாளை முதல் வங்கிகளில் கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு ஆரம்பித்தால் மட்டுமே டெபாசிட் செய்ய முடியும்.

அதே நேரத்தில் தங்களது சொந்த வங்கி கணக்கில் வருகின்ற டிசம்பர் 30-ம் தேதி வரை பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம்.

மேலும், குடிநீர் வரி, சொத்து வரி, மின்கட்டணம் போன்றவற்றை பழைய ரூபாய் நோட்களில் செலுத்தவும் இன்றுடன் அவகாசம் முடிகிறது. அதே போல், பெட்ரோல் பங்குகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் போன்றவற்றில் பழைய ரூபாய் நோட்டுகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசமும் இன்றுடன் முடிகிறது.

சுங்கச்சாவடி கட்டணத்துக்கு அளிக்கப்பட்டிருந்த விலக்கும் இன்றுடன் முடிவடைகிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
Advertisement
[X] Close