Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோக்சபா தலைவர் மீது பேப்பர் வீச்சு

பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக இரு அவைகளிலும் தொடர்ச்சியாக எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இன்றும் லோக்சபாவில், ரூபாய் நோட்டுகள் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஏற்பட்ட அமளியின் போது, சபா நாயகர் சுமித்ரா மஹாஜன் மீது சமாஜ்வாதி கட்சியின் அக்‌ஷய் யாதவ் பேப்பர் கட்டை எறிந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த சுமித்ரா மஹாஜன், அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். அக்‌ஷய் யாதவின் செயலுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ