Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

லோக்சபா தலைவர் மீது பேப்பர் வீச்சு

டெல்லி பாராளுமன்ற இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இரு அவைகளிலும், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிப்புக்கு எதிராக தொடர்ச்சியாக எதிர்க்கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 


இன்றும் லோக்சபாவில், ரூபாய் நோட்டுகள் விஷயத்தைக் கையில் எடுத்து, எதிர்க்கட்சிகள் வாக்குவாதம் செய்தனர். அப்போது ஏற்பட்ட அமளித் துமளியில் சபா நாயகர் சுமித்ரா மஹாஜன் மீது சமாஜ்வாதி கட்சியின் அக்‌ஷய் யாதவ் பேப்பர் கட்டை எறிந்ததாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த சுமித்ரா மஹாஜன், அவையின் நடவடிக்கைகளை ஒத்திவைத்தார். அக்‌ஷய் யாதவின் செயலுக்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ