Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

'மோடியிடம் ஒன்று கேட்க வேண்டும்..’ - மன்மோகன் காட்டம்!

இன்று மாநிலங்களவையில் ரூபாய் நோட்டு தொடர்பான விவாதத்தில் பேசிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், மோசமான ஆளுமைக்கு உதாரணமாக ரிசர்வ் வங்கி திகழ்வதாக கடுமையாக சாடியுள்ளார். 

மேலும் பேசிய மன்மோகன், “ரூபாய்நோட்டு விவகாரத்தில் மத்திய அரசின் அணுகுமுறையை தான் எதிர்க்கிறோம். இந்த திடீர் அறிவிப்பால் மக்களுக்கு 50 நாட்களுக்கு இன்னல் தொடரும். மேலும் கூட்டுறவு அமைப்புகள் முற்றிலும் முடங்கியுள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 2% குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை  நீண்ட கால அளவில் நன்மை விளைவிக்கும் என சிலர் கூறி வருகின்றனர். அந்த நீண்ட கால அடிப்படையில் பார்த்தால் அதற்குள் நாம் இறந்திருபோம்.

இந்த திடீர் அறிவிப்பால், தற்போது வரை 60-65 பேர் இறந்துள்ளனர்.  மக்கள் படும் இன்னல்களுக்கு பிரதமர் உரிய நிவாரணம் வழங்குவார் என நம்புகிறேன். பிரதமரிடம் ஒன்று கேட்க விரும்புகிறேன், இதுவரை எந்த நாட்டிலாவது வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை எடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதா?”, இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ