Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

வரலாறு காணாத சரிவில் ரூபாய் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 27 பைசா குறைந்து, 68.83 ரூபாயாக உள்ளது. கடந்த 9 மாதங்களில் இல்லாத ரூபாய் மதிப்பு வீழ்ச்சி இது. தொடர்ச்சியாக ஐந்தாவது நாளாக ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளது.

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து இந்திய ரூபாயின் மதிப்பு 2.92 சதவீதம் சரிந்துள்ளது.

தொடர்ச்சியாக வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறுவது, அமெரிக்க ஃபெடரல் வங்கியில் வட்டி விகிதங்கள் அதிகரித்தது மற்றும் மத்திய அரசின் 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு போன்ற காரணங்களால் இந்த வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ