Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

புல்லட் புரூஃப் பாத்ரூம்களுடன் ரூ.50 கோடியில் முதல்வருக்கு பங்களா!

முதல்வ

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் பல நல்ல விஷயங்களில் செய்திகளில் அடிபட்டாலும் நெகட்டிவாகவும் அவ்வப்போது செய்திகளில் இடம் பிடிப்பார். விவசாயிகள் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொண்டிருந்த போது ரூ.7 கோடி செலவில் யாகம் நடத்தியது. தனது சொந்த உபயோகத்துக்காக  ரூ.5 கோடி மதிப்பீட்டில் பென்ஸ் பஸ் வாங்கியது. அதுபோல் ரூ. 4.5 கோடி மதிப்பீட்டில்  டொயாட்டோ பிரடோ ரக கார்கள் வாங்கியது என சர்ச்சையில் சிக்கியிருந்தார். தற்போது  அதிக பொருட் செலவில் புதிய பங்களா கட்டியுள்ளார். 

 ஹைதரபாத் நகரின் இதயப் பகுதியான பேகம்பெட்டில் ஒரு லட்சம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ள இந்த காம்ப்ளக்சுக்கு 'பிரகதி பவன்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த காம்ப்ளக்சில் இரு கட்டிடங்கள் இருந்தன. அவை ராஜசேகர ரெட்டி ஆட்சிக் காலத்தில் முக்கிய விருந்தினர்கள் தங்கும் விடுதியாகவும் அதிகாரிகள் ஓய்வெடுக்கும் பங்ளாவாகவும் மாற்றப்பட்டிருந்தது. 

தற்போது அதனுடன் சேர்த்து புதியதாக 3 புதிய  கட்டிடங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதில் சந்திரசேகரராவ் குடும்பத்தினருக்காக பெரிய பங்ளா ஒதுக்கப்பட்டுள்ளது. இது தவிர தலைமைச் செயலாளர், போலீஸ் டிஜிபி மற்றும் உளவுத்துறைத் தலைவர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கும் இங்கு புதிய பங்களாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.  சுமார் 250 பேர் அமர்ந்து சினிமா பார்க்கக் கூடிய தியேட்டர், சந்திரசேகர ராவ் மக்களை சந்திப்பதற்காக 'ஜனஹிதா' என்ற கான்பெரன்ஸ் ஹால் போன்றவை புதிதாகக் கட்டப்பட்டுள்ளன. ஆடிட்டோரியமும் கட்டப்பட்டிருக்கிறது. கட்டிடத்தின் அத்தனை அறைகளிலும் புல்லட் புரூப் வசதியுடன் கூடிய கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. பாத்ரும் கூட புல்லட் புரூப் வசதி செய்யப்பட்டுள்ளது. 

இந்த காம்ப்ளக்சை கட்டுவதற்காக தொடக்கத்தில் ரூ.35 கோடி மதிப்பீட்டில் திட்டமிடப்பட்டது. ஆனால் தற்போது செலவு ரூ.50 கோடி வரை எட்டி விட்டதாக சொல்லப்படுகிறது. டாடா குழுமத் தலைவராக இருந்த சைரஸ் மிஸ்திரியின் சபூர்ஜி பலோன்ஜி ரியல் எஸ்டேட் நிறுவனம்தான் இந்த காம்ப்ளக்சை கட்டியுள்ளது. ஒவ்வொரு கட்டிடமும் வாஸ்து பார்த்து கட்டப்பட்டுள்ளது. 

பேகம்பேட்டில் தெலுங்கானா மாநில செகரட்டரியேட் இயங்கி வருகிறது. அந்தக் கட்டிடத்தின் 6வது தளத்தில் முதல்வரின் அறை இருந்தது. கடந்த ஒரு வருடமாக சந்திரசேகரராவ் தெலுங்கானா செக்கரட்டரியேட்டில் உள்ள தனது முதல்வர் அறைக்குச் செல்வதில்லை. தனது கேம்ப் ஆபிசிலேயே இருந்தே அனைத்துப் பணிகளையும் கவனித்து வந்தார். அதனால்தான் புதியதாக இவ்வளவு செலவழித்து அனைத்து வசதிகளுடன் கூடிய பங்களா காம்ப்ளக்ஸ் எழுப்பப்பட்டுள்ளது. 

தனக்காக எழுப்பப்பட்டிருந்த புதிய பங்ளாவில் சந்திரசேகர ராவ் இன்று குடியேறினார். அதிகாலை 5.22 மணிக்கு புதிய வீட்டின் கிரகப் பிரவேசம் நடந்தது. ஸ்ரீ திரிதாண்டி ஸ்ரீமன் நாராயண ராமனுஜ சின்ன ஜீயர் அதிகாலையில் பூஜைகளை நடத்தினார். பின்னர், சந்திரசேகர ராவும் அவரது மனைவியும் புதிய பங்ளாவுக்குள் காலடி எடுத்து வைத்தனர். தெலுங்கானா மாநில ஐடி துறை அமைச்சரும் சந்திரசேகரா ராவின் மகனுமான கே.டி ராமராவ், மகள் நிஜாமாபாத் தொகுதி எம்பி கவிதா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், அரசு அதிகாரிகள் கிரகப்பிரவேச விழாவில் கலந்து கொண்டனர். 

வழக்கமாக கேஎஸ்ஆருடன் எல்லா விழாக்களிலும் ஒருங்கே பங்கேற்கும் தெலுங்கானா மாநில கவர்னர் ஈஎஸ்எல். நரசிம்மன் கடைசியாகத்தான் விழாவில் பங்கேற்றார். மக்கள் வரிப்பணத்தில் சந்திரசேகரராவ் ஆடம்பர பங்களா கட்டியுள்தாக எதிர்க் கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன. அதனால், விழாவில் பங்கேற்க கவர்னர் சற்று தாமதாக வந்ததாகக் கூறப்படுகிறது. அதேபோல் சந்திர சேகர ராவின் கேபினட்டில் உள்ள முக்கிய அமைச்சர்களும் கிரகப் பிரவேசத்தை புறக்கணித்தனர். 

-எம்.குமரேசன்
 

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ