Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பணப் புழக்கம் சரியாக 6 மாதங்கள் ஆகுமாம்... வங்கி ஊழியர்கள் சம்மேளனம் சொல்லும் காரணம்!

பணப் புழக்கம்

 

இந்தியாவில், நாசிக் மஹாராஷ்டிரா, திவாஸ் மத்தியப் பிரதேசம், மைசூரூ கர்நாடகா,  ஹைதராபாத் ஆந்திரப் பிரதேசம் ஆகிய நான்கு இடங்களில் பணம் அச்சடிக்கப்பட்டு வருகின்றன. பணப் புழக்கத்தை அதிகரிக்க இந்த நான்கு இடங்களிலும் 24/7 பணத்தை அச்சடித்தால் கூட வரும் ஏப்ரல் 2017-க்கு முன், பணப் புழக்கம் சீராவது கடினம் என்று இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் (பி.இ.எஃப்.ஐ - BEFI) தெரிவித்திருக்கிறது.

வங்கி வேலைகள் :
பணப் புழக்கத்தை சரி செய்யும் வேலைகளுக்கு இடையில்,  வங்கிகள் தங்களுடைய பிரதான வேலைகளான கடன்களை கொடுப்பது, கொடுத்த கடன்களை வசூலிப்பது, பணத்தை ஒரு வங்கியில் இருந்து மற்ற கணக்குகள் மற்றும் வங்கிகளுக்கு நெஃப்டி மற்றும் ஆர்.டி.ஜி.எஸ் (NEFT & RTGS) மாற்றுவது போன்ற செயல்களை செய்ய முடியாமல் தேங்கி பொதுமக்களுக்கே பெரிய பிரச்னைகளைத் தான் ஏற்படுத்துகிறது.

பிக் பசார் வங்கியா....?
பணப் புழக்க பிரச்னைகளை குறைக்க, இந்திய அரசு பிக் பசாரிடம் பணத்தை மாற்றிக் கொள்ளலாம் என்று வெளியிட்ட அறிவிப்பு, அரசு மேல் வைத்திருக்கும் நம்பிக்கை மற்றும் மரியாதையை கேள்விக் குறியாக்குகிறது. பணப் புழக்கம் இந்தியாவில் பெரிய பிரச்னையாகத் தான் இருக்கிறது. அதற்காக தனியார் நிறுவனமான பிக் பசாரிடம் புதிய ரூபாய் நோட்டுகளை கொடுத்து மாற்றச் சொல்வதா...? அப்படி என்றால் பிக் பசாரிடம் வங்கி உரிமங்கள் இருக்கிறதா...? என்று காட்டமாக கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

பணப் புழக்கம்

அரசு அலுவலகங்கள் :
பணப் புழக்கத்தை அதிகரிக்க, இந்தியாவின் அரசுத் துறைகளே போதுமானவை.  இந்தியாவில் 15,000க்கு மேற்பட்ட ரயில்வே கவுன்டர்கள், 10,000க்கு மேற்பட்ட பி.எஸ்.என்.எல் கிளைகள், 10,000க்கு மேற்பட்ட ஜெனரல் இன்ஷூரன்ஸ் கார்ப்பரேஷன் நிறுவன அலுவலகங்கள் கிளைகள், 4,000 எல்.ஐ.சி கிளைகள் இருக்கின்றன. இதை எல்லாம் விட 350க்கும் மேற்பட்ட மாவட்ட பிரதான வேளாண் கூட்டுறவு வங்கிகள், 93,000 வேளாண் கூட்டுறவு வங்கிகள் மற்றும் 6 லட்சம் கூட்டுறவு சங்கங்களில் பரவலாக மாற்ற முடியாத பணத்தையா 258 பிக் பசார் அலுவலகங்கள் மற்றும் கடைகள் மாற்றிவிடப் போகிறது.

எப்படி சரிவரும் :
பணப் புழக்க பிரச்னையின் இக்கட்டான சூழ்நிலையில் கூட்டுறவு வேளாண் வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாது என்று அறிவித்திருப்பது எந்த வகையில் சரி என்று தெரியவில்லை. எப்போதும் வங்கிகளில் வரும் கூட்டத்தை விட  15 மடங்கு நபர்கள் தங்கள் பணத்தை மாற்ற வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் கூட்டுறவு வங்கிகளில் பணத்தை மாற்ற முடியாத நிலை வந்திருப்பதால், வங்கிகளில் இன்னும் கூட்டம் அதிகரிக்கவே செய்யும். மேலும் வங்கிப் பணிகள் தாமதமாகும்.

மூன்றாவது காலாண்டு குறையும் :
வங்கிகளின் சாதாரண வேலைகளை சரி வர செய்ய முடியாத நிலையால், வரும் டிசம்பர் 2016 காலாண்டு முடிவுகள் அத்தனை நன்றாக இருக்காது. இதை காரணமாக வைத்து வங்கிகளை, தனியாருக்குத் தாரை வார்க்க தயாராகிறதா இந்திய அரசு என்கிற சந்தேகம் தோன்றுகிறது. அது மட்டும் இன்றி வாராக் கடன்களுக்கான கெடு காலம் 90 நாட்களில் இருந்து புதிய உத்தரவுகள் பேரில் 150 நாட்களாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. இதனால் பின்னாளில் வங்கிகளுக்கு பிரச்னைகள் வலுவாக எழலாம், என்று வங்கி ஊழியர்கள் சம்மேளனம் கேள்விகளை எழுப்பி இருக்கிறது

இந்தப் பணப்புழக்க பிரச்னைகள் தீர வேண்டும், என்பதால் நாளை இந்தியா முழுவதிலும் இருக்கும் வங்கிகளில் மாலை 5.30 மணிக்கு ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்திருக்கிறது.

- மு.சா.கெளதமன்.

எடிட்டர் சாய்ஸ்

ஜெர்சி மாடுகள், பிரேசில் காபி, மருத்துவமனை உறுதி! ஜெயலலிதா பற்றி தோழியின் நினைவலைகள்
placeholder

அதே மாதிரி ஜெயலலிதா தன்னுடைய 10 வயதில் சிவாஜி கணேசன் முன்னிலையில் மயிலாப்பூரில் செய்த நடன அரங்கேற்றப் படங்கள் முதல் அதற்குப் பிறகான அவரது சின்ன வயசுப் படங்களை நாங்கள் தொகுத்திருந்தோம். அதை 2012 ம் ஆண்டு, எனக்கு அவரை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்த போது கொடுத்தேன். அதைப் பார்த்து ரொம்ப சந்தோஷமாகிட்டாங்க. அந்தப் படத் தொகுப்பை, தன்னோட ஹேண்ட் பேக்ல வச்சுக்கிட்டாங்க. பத்திரமா வைத்துக் கொள்வதாகவும் சொன்னாங்க. சினிமாக்காரங்க என்றால் ஈஸியாக அணுகலாம் என்கிற திரையை உடைத்து, அவங்க தனி ரூட்டைப் போட்டு, அதை மத்தவங்க ஃபாலோ பண்ற அளவுக்கு வாழ்ந்து காட்டினாங்க. குறிப்பா, சினிமா விழாக்கள், நிகழ்ச்சிகளுக்கு போக மாட்டாங்க. 

அம்மாவிடமிருந்து போன் வந்தால்...!? - உருகும் வீணை காயத்ரி
placeholder

''சமீபத்தில் கொலை மிரட்டல் விட்டப் பையனால் அம்மாவை சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. கடந்த ஜூலை 27-ம் தேதி சி.எம் ஆபீஸ்ல இருந்து போன் வந்தது. அம்மா உங்களை உடனே வரச்சொன்னதா சொன்னாங்க. நான் கொஞ்சமும் யோசிக்காமல் போய் நின்னேன். பொதுவாகவே நானும், அவங்களும்தான் தனியாகத்தான் பேசிப்போம். ஆனா, அன்றைக்கு, எல்லா அதிகாரிகளும், இருந்தாங்க. அவங்க முன்னாடி, 'எப்படி இருக்கீங்க' என கேட்டார். நான் பதில் சொல்லிவிட்டு, 'நவம்பர் மாதத்தோடு என்னோட டர்ன் முடியுது' என சொன்னேன். இதற்கு அவர், எல்லோருடைய முன்னிலையிலும், அடுத்த மூன்று வருஷத்துக்கும் நீங்களே துணை வேந்தரா இருங்க என சொல்லிவிட்டு, அவருக்கு பின்னால் இருக்கும் எல்லோரையும் பார்த்து மறுபடியும்  இதையே சொன்னார். அப்போதுதான் அவர்கிட்ட, 'நான் உங்களை சந்திக்க இரண்டு வருஷமாக முயற்சி செய்துட்டு இருந்தேன். இந்த கொலை மிரட்டல் காரணமாகத்தான் உங்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு, நான் தனி மனுஷியாக இசை பல்கலைக்கழகத்தை நடத்தி வருகிறேன்' என சொன்னேன். உடனே, சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, அவங்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்து கொடுங்க என சொன்னார்.  'அடுத்த முறைப் பார்க்கும்போது உங்க முகத்துல சிரிப்பை மட்டும் தான் பார்க்கணும்' என ஆறுதல் சொன்னாங்க. அந்த வார்த்தை இன்னும் என் காதில் கேட்டுட்டே இருக்கு. அதுதான் நான் அவங்களை கடைசியாகப் பார்த்தது.  அதற்குப் பிறகு அவரை பார்க்க முடியவில்லை. அவர் சொன்னது போல அதற்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கும்போதே அம்மா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுட்டாங்க. நான் இப்போ அடுத்த ஆர்டருக்காக காத்திட்டு இருக்கேன். இன்னும் ஆர்டர் என் கைக்கு வரவில்லை''

MUST READ