Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பொது சேவைகளுக்கு ரூபாய் நோட்டுகளை செலுத்த தேதி நீட்டிப்பு!

 

பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சேவைகளைப் பெற டிசம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக, பழைய ரூபாய் நோட்டுகளை இனி வங்கியில் டெபாசிட் மட்டுமே செய்ய முடியும் என்றும், பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தி சில்லறை பெற முடியாது என்றும் மத்திய அரசு தெளிவுபடுத்தி உள்ளது.

மேலும், பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டர், மருத்துவமனைகள் ஆகிய பயன்பாட்டுக்கு, வழக்கம்போல் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், குடிநீர் கட்டணம் மற்றும் மின் கட்டணம் ஆகியவற்றுக்கும் பழைய ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய மாநில அரசு பள்ளிகளிலும் பழைய ரூபாய் நோட்டுகளை கட்டணமாக செலுத்தலாம்.

வெளிநாட்டுச் சுற்றுலா பயணிகள் வாரம் ஒரு முறை ரூ.5000 வரை மாற்றிக்கொள்ளலாம் என்றும் சலுகை வழங்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் மாற்ற விதிக்கப்பட்ட காலக்கெடு இன்றுடன் முடிவடைந்த நிலையில், தற்போது மத்திய அரசு காலக்கெடுவை நீட்டித்துள்ளதால், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்