Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தனிநபர் லோன்களுக்கான வட்டி விகிதம் குறைய போகிறதா?

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, தற்போது ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான வங்கி வட்டி விகிதத்தை 1.9% வரை அதிரடியாகக் குறைத்துள்ளது. 

வட்டி குறைப்பைப் பொறுத்தவரை 7 முதல் 45 நாட்கள் வரையிலான டெபாசிட்களுக்கு 5% லிருந்து 3.75% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதைப்போல், 180 முதல் 210 நாட்கள் வரையிலான டெபாசிட் வட்டி விகிதம் 5.75% லிருந்து 3.85% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 211 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான வட்டி விகிதத்துக்கு 5.75% லிருந்து 4% வரையிலும், ஒரு வருடத்திலிருந்து 3 ஆண்டுகளுக்கு உண்டான வட்டி விகிதம் 6% லிருந்து 4.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது 2016, நவம்பர் 24-ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. 

வட்டி


எதற்காக இந்த நடவடிக்கை? 

ஒரே வார்த்தையில் கூறுவது என்றால் 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு மட்டுமே. ஏனெனில் ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை அடுத்துப் பல கோடி ரூபாய் பணம் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. நவ.9-ம் தேதி முதல் நவ.18-ம் தேதி வரையிலான கணக்கீட்டின் படி ரூ.5.4 லட்சம் கோடி அளவிலான பணம் வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

ஏன் வட்டி விகிதத்தைக் குறைக்க வேண்டும்? 

வங்கியின் முக்கிய பொறுப்பே பணத்தை டெபாசிட் மூலமாகப் பெறுவது. மற்றொன்று கடன் வழங்குவது. இப்போது 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின் பாரத ஸ்டேட் வங்கிக்கு மட்டும் ரூ.1.15 லட்சம் கோடி டெபாசிட் ஆக கிடைத்துள்ளது. இந்த பணத்தை எல்லாம் வாங்கி வங்கி லாக்கரில் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. இதன் ஒரு முயற்சியாகத் தான் ஒரு கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரையிலான டெபாசிட் பணத்துக்கு 1.90% வரை வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளனர். அடுத்தது வங்கிகள் வழங்கும் கடன் தொகைக்கான வட்டி விகிதத்தையும் குறைக்க அதிக வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் சொல்கின்றனர். 

இது குறித்து நிதி ஆலோசகர் ச.ராமலிங்கம் கூறுகையில், "இப்போது 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பினை அடுத்து எஸ்பிஐ வங்கியில் மட்டும் ரூ.1.15 லட்சம் கோடி டெபாசிட் ஆக கிடைத்துள்ளது. இந்த பணத்தை எல்லாம் வாங்கி வங்கி லாக்கரில் வைத்துக் கொண்டு இருக்க முடியாது. இந்த பணத்தை எல்லாம் வைத்துக் கொண்டு வங்கிகளால் ஒன்றும் செய்ய முடியாது. 
வங்கிகளைப் பொறுத்தவரை ஒரு வழியில் வரும் பணத்தை மற்றொரு வழியில் அதை வெளியே கொண்டு சென்றால் மட்டுமே வங்கிகளால் சம்பாதிக்க முடியும். ஆகையால் வங்கிகளுக்கு இப்போது பணம் விநியோகம் அதிகரித்துள்ளது.

இப்போது டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தைக் குறைத்துள்ளார்கள். விரைவில் கடன்களுக்கான வட்டி விகிதத்தைக் குறைக்க முன்வரலாம். எஸ்பிஐ வங்கியைப்போல, நாளை மற்ற வங்கிகளும் தங்களுடைய டெபாசிட் திட்டங்களுக்கு வட்டி விகிதத்தை குறைக்க முன்வருவார்கள். இப்போது ஆரம்பத்தில் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்துள்ளவர்களின் வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. விரைவில் மற்ற விகிதங்களுக்குமான வட்டி விகிதத்தைக் குறைக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" என்றார். 

எஸ்பிஐ வங்கியின் முடிவினை அடுத்து மற்ற வங்கிகளும் டெபாசிட்டுக்கான வட்டி விகிதத்தை குறைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வங்கிகளைப் பொறுத்தவரை அடுத்த 6 முதல் 9 மாதங்களில் 0.75% முதல் 1% வரை வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இதுமட்டுமின்றி வங்கிகளில் எதிர்பாராத அளவில் பணம் குவிந்துள்ளதால் அடுத்த நிதிக் கொள்கை கூட்டத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆக ஒட்டுமொத்தத்தில் வீட்டுக் கடன், கார் கடன் என பலதரப்பட்ட கடன்களுக்கான வட்டி விகிதம் குறைய அதிக வாய்ப்பு இருக்கிறது. ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்குப் பின் வங்கியில் கடன் வாங்கியவர்கள், இனி கடன் வாங்குபவர்கள் நிச்சயம் பலனை அனுபவிப்பார்கள். 

- சோ.கார்த்திகேயன் 

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close