Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

பிரதமர் வந்தே ஆக வேண்டும்..! நாடாளுமன்றத்தை முடக்கியது எதிர்க்கட்சிகள்

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் பணம் செல்லாது என அறிவித்த மத்திய அரசின் திட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், இது தொடர்பாக விவாதிப்பதற்காக மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி, கலந்துகொள்ள வேண்டும் என்றும் எதிர்க் கட்சியினரும் வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பகல் 12 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாநிலங்களவை மீண்டும் கூடியது. அப்போதும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவை நடவடிக்கை பிற்பகல் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

முக்கியமாக மத்திய அரசின் ரூபாய் நோட்டு விவகாரத்தால், கடந்த வாரம் முதல் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருவது குறிப்பிடத்தக்கது. 
 

எடிட்டர் சாய்ஸ்

அப்போலோ டூ எம்.ஜி.ஆர் சமாதி... ஜெயலலிதாவுக்கு அரண் அமைத்த மன்னார்குடி!

MUST READ