Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

’மக்கள் பணமில்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்’- கபில் சிபல்

ரூபாய் நோட்டு விவகாரம் தொடர்பான அனைத்து வழக்குகளின் விசாரணையையும், டிசம்பர் 2-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. மேலும் நேற்று அறிவிக்கப்பட்ட பழைய ரூபாய் நோட்டு குறித்த புதிய அறிவிப்புகள் விரிவான பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்படும் என மத்திய அரசு தரப்பில் நீதிமன்றத்தில் கூறப்பட்டுள்ளது.  

ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், அனைத்து வழக்குகளையும் உச்ச நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணைக்குத் தடை விதிக்க மறுப்பு தெரிவித்ததோடு. இது தொடர்பாக விளக்கம் அளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று நடந்த போது,  மத்திய அரசு தரப்பின் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, “ரூபாய் நோட்டு தொடர்பாக, மத்திய அரசு இதுவரை வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும்,  விரிவான பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.

 

வழக்கு விசாரணையின்போது மத்திய அரசுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்த மனுதாரர் ஒருவருக்காக ஆஜரான கபில் சிபல், “ அரசின் முன்னறிவிப்பின்றி வெளியான திடீர் அறிவிப்பால், பொதுமக்கள் பணமில்லாமல் பட்டினியுடன் வீதியில் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது”, என நீதிபதிகள் அமர்வு முன்பு முறையிட்டுள்ளார்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ