Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

நாடாளுமன்றத்திற்குள் புகுந்த வாலிபரால் பரபரப்பு

நாடாளுமன்ற பாதுகாப்பு வேலியைத் தாண்டி வாலிபர் ஒருவர் குதித்த சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

பழைய 500, 1000 ரூபாய் நோட்டு விவகாரத்துக்கு இடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த வாரம் தொடங்கியது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.

இந்த நிலையில், நாடாளுமன்ற பாதுகாப்ப வேலியை தாண்டி வாலிபர் ஒருவர் குதித்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அதில், அந்த வாலிபர் பழைய ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட முயன்றதாக தெரியவந்தது. மேலும், அவர் பீகார் பாஜக எம்.பி.போலா சிங்கிற்கு தொடர்புடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ