Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கறுப்புப் பணம் மீண்டும் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க இதற்கு மாறுங்கள் மக்களே: பிரதமர் வேண்டுகோள்

கறுப்புப் பணம் மீண்டும் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு மாறுங்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

பஞ்சாப் மாநிலம் பதின்டாவில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி, ஏழை, எளிய மக்களின் நலனுக்காக எடுக்கப்பட்டுள்ள முயற்சியை அனைவரும் வரவேற்க வேண்டும் என்று கூறினார். 

கறுப்புப் பணத்திற்கு எதிரான யுத்தத்தில் சாமான்யர்களுடன் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொண்ட பிரதமர், அரசியல் ஆதாயத்துக்காக எந்தவொரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்றார்.

அனைவருக்கும் தரமான சிகிச்சை கிடைக்கச் செய்வதே அரசின் நோக்கம் என்று கூறிய பிரதமர், எய்ம்ஸ் போன்ற உயர்தர மருத்துவமனைகள் வர வேண்டும் எனில் கறுப்புப்பணம் ஒழிய வேண்டும் என்றும், தொடங்கிய அனைத்து திட்டங்களையும் முடிப்பதே மத்திய அரசின் நோக்கம் என்றும், எங்களது அறிவிப்புகளை நடப்பு ஆட்சிக் காலத்திலேயே அமல்படுத்துவோம் என்றும் கூறினார். 

கறுப்புப் பணம் புழக்கம் ஏழை நடுத்தர மக்களை கடுமையாக பாதித்துள்ளது என்றும், ஏழை நடுத்தர மக்கள் அடிப்படை வசதிகள் பெறுவதை கறுப்புப்பணம் தடுக்கிறது என்றும், புற்றுநோய் போல கறுப்புப்பணம் நாட்டின் பொருளாதாரத்தை அரித்துக் கொண்டிருக்கிறது என்றும் பிரதமர் தெரிவித்தார்.

நேர்மையான வழியில் பணம் சம்பாதித்தவர்கள் அரசின் நடவடிக்கையை ஆதரிக்கின்றனர் என்று கூறிய பிரதமர், மக்களின் கைகளில் உள்ள மொபைல் போன்களை வங்கியாகவும், பர்சாகவும் பயன்படுத்தலாம் என்றும், நாட்டில் உள்ள குடும்பங்களைக் காட்டிலும் மொபைல் போன் எண்ணிக்கை அதிகம் என்றும் கறுப்புப் பணம் மீண்டும் புழக்கத்துக்கு வருவதைத் தடுக்க மின்னணு பணப்பரிமாற்றத்துக்கு மாறுங்கள் என்றும் கேட்டுக் கொண்டார்.

மளிகைப் பொருட்களை கூட மின்னணு பணப் பரிவர்த்தனை மூலம் வாங்கிக் கொள்ளலாம் என்றும், மின்னணு பணப் பரிவர்த்தனை குறித்து தெரிந்தவர்கள் மற்றவர்களுக்கு கற்றுக் கொடுங்கள் என்றும் பிரதமர் வேண்டுகோள் விடுத்தார்.

பாகிஸ்தானின் பிடிவாதத்தால், சிந்து நதிநீர் யாருக்கும் பலன் தராமல் வீணாக கடலில் கலக்கிறது என்று கூறிய பிரதமர், சிந்து நதியில் இந்தியாவுக்குள்ள உரிமைகளை விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றார்.

மேலும், இந்திய ராணுவத்தின் துல்லிய தாக்குதல் எல்லையின் அசாதாரண சூழலை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Advertisement
Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் - ஸ்பெஷல் ஆல்பம்!
Advertisement

MUST READ

Advertisement
[X] Close