Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

மழலையர் பள்ளியில் குழந்தைக்கு நேர்ந்த கொடூரம் (அதிர்ச்சி வீடியோ)

மழலையர் பள்ளியில் 9 மாத குழந்தையை அங்கு பணியாற்றும் பெண் ஒருவர் சித்ரவதை செய்து தூக்கி வீசிய வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர சம்பவம் மும்பையில் நடந்துள்ளது.

மும்பையைச் சேர்ந்த ரஜத் சின்கா- ருஷிதா தம்பதி தனது 9 மாதக் குழந்தையை அங்குள்ள மழலையர் பள்ளியில் விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். கடந்த 21-ம் தேதி இதேபோல் குழந்தையை அங்கு விட்டுச் சென்றுள்ளனர். இந்த நிலையில், பள்ளியில் பணியாற்றும் பராமரிப்பாளர் அப்சனா, அந்த குழந்தையை காலால் மிதித்தும், பந்தை வீசுவது போன்று தரையில் குழந்தையை வீசியுள்ளார். இதில், குழந்தையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

 

 

 

 

இது குறித்து குழந்தையின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து பள்ளியில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமரா பதிவை ஆய்வு செய்தபோது காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். இதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட விசாரணையில், கடந்த 5 மாதங்களுக்கு முன்னர்தான் இந்த பள்ளி திறக்கப்பட்டது என்றும் அப்சனா என்ற பெண் கடந்த மாதம்தான் பணியில் சேர்ந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

எடிட்டர் சாய்ஸ்