Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

இஸ்ரேலை மிரட்டும் காட்டுத் தீ: பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

இஸ்ரேலின் ஹய்வா நகரை கடந்த சில நாட்களாக காட்டுத் தீ மிரட்டி வருகிறது. ஹய்வா நகர் அருகே உள்ள காட்டில் ஏற்பட்ட தீ பலத்த காற்று காரணமாக நகருக்கும் பரவியது. இதையடுத்து ராணுவ வீரர்கள், மாணவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக அங்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தால் இதுவரை உயிரிழப்பு ஏதும் ஏற்டவில்லை. ஆனால், தொடர்ந்து தீ கொளுந்துவிட்டு எரிவதால் ஹய்வா நகரில் புகை மூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் பலருக்கு மூச்சுத்திணறல் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கிடையே தீவிரவாதிகளின் விரோத செயலினால்தான் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கும் என இஸ்ரேல் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக சிலர் கைதும் செய்யப்பட்டுள்ளனர்.

எடிட்டர் சாய்ஸ்

MUST READ