Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

சாய்னா தோல்வியை சரிகட்டிய சிந்து

ஹாங்காங் ஓபன் சர்வதேச  பேட்மின்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். ஹாங்காங்கின் கோவ்லூன் நகரில் நடந்து வரும் போட்டியில், பெண்கள் ஒற்றையர் பிரிவுக்கான  கால் இறுதிப்போட்டி நடந்தது. அதில் சிங்கப்பூர் வீராங்கனை லீயாங்குவை எதிர்க்கொண்ட சிந்து, 21-17, 21-23, 21-18 என்ற செட் கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு புறம் ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் போட்டியில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால்,  ஹாங்காங்கின் சியூங் கன் இய்யுடன் மோதி தோல்வியடைந்து, ஹாங்காங் ஓபனில் இருந்து வெளியேறி உள்ளார். சாய்னா காலிறுதியில் வெற்றியடைந்திருந்தால் சாய்னா, சிந்து நேருக்கு நேர் அரையிறுதியில் மோதியிருப்பார்கள். 

எடிட்டர் சாய்ஸ்

MUST READ